Tuesday, August 08, 2006

ஆழி சூழ் அரங்கனுக்கும்,
ஏழுமலை தலைவனுக்கும்
உன்டான அந்த ஸ்ரீவத்ஸம்
மன்னன் மாரினில் தூங்கும் ஸ்ரீவத்ஸம்
கன்னன் மார்பில் தவழும் ஸ்ரீவத்ஸம்

ராமாயனத்தில் இருந்து

சீதை அன்று ஆபரனங்களை கீழெ விட்டு எறிந்தவாரு சென்றாள் - ராமனுக்கு தான் செல்லும் வழி காட்ட அதை பின்பற்றிய ராமனும் அவள் சேர்ந்த இடம் அறிந்தான்.

பின்னர் ராவன வதம் முடிந்து திரும்பும்போது
புஷ்பக விமானத்திலே சீதைக்கு அந்த இடமெல்லாம் கான்பித்தானாம். அப்போது ஆங்காங்கே இருந்து கை கூப்பிய மக்களுக்கு சீதையும் ராமனும் மீண்டும் நகைகளை அள்ளி போட்டனர். நகைகள் தீர்ந்ததும் - புஷ்பக விமானத்தில் இருந்த அழகு மனிகளையும் கிள்ளி எடுத்து போட்டனர்.
அப்படி ஒரு மிக அழகிய ஸ்ரீவத்ஸம் விழுந்தது. அதன் அழகில் மயங்கிய விபீஷனன் அதை எடுக்கவே அருகில் இருந்த அந்தன சிறுவனாம் ஆணை முகத்தானை அழைத்தானாம்
இதனாலேயே திருவரங்கம் உருவாகியதாம்

அந்த ஸ்ரீவத்ஸம் வெகு காலங்களுக்கு பின் இப்போது கலி யுகத்திலே வீடாக உயர்ந்து உள்ளது.
புஷ்பக விமானத்திலிருந்து வீழ்ந்ததால் புஷ்பக நகரம் என்று அந்த இடம் அமைந்தது.

பல காலம் திரு சிர புரியிலும் சிற்சில காலம் மாயுரத்திலும், "கபில ஆரன்யம்" என்று க்ருத யுகதில் சொல்லபட்ட கலிபோர்னியாவிலும்,
பின்னர் கச்தினாபுரம் என்று சொல்லப்பட்ட தில்லியிலும்

பங்கயர்வல்லி என்று முழங்கபட்ட பங்களூரிலும்
அஸ்த்ர ஆலயம் என்ரு முன்னர் சொல்லி வந்த ஆச்த்ரலியாவிலும்
சென்று பாடசாலையில் பயின்றும், கும்பித்தவமாம் சம்பள வேலையும் செய்த பாலாக்ருஷ்ணனின் தவ மகிமையை மெச்சி
1200 சதுர அடி மனை வாங்கி அதில் பத்து சதுரம் கட்ட - அங்கே உனக்கு ஸ்ரீவத்ஸம் கிட்டும் என்று பகவான் பனித்தார்,

அவரே மேலும் சொல்லுவார் - இந்த க்ருகப்ரவேசத்திற்க்கு வருவோர் அனைவர்க்கும் இந்த விழாவை சிறப்பிப்போர்க்கும் முன்னின்று நடத்துவோர்க்கும்
இக சௌக்கியங்களாம் வீடு, வாகனம், வசதி, வழுக்கை, சொத்து, நித்ய போஜனம், சம்ருத்தி அனைத்தும் கிடைக்கும்

இதற்கு வருபவர்
தாய் தந்தை யானால் தனயர் காப்பர், பனிந்து நடப்பர்
சேயானாள் பெற்றோர் காப்பர், கேட்டதை தருவர்
இளைஞன் ஆனால் இருப்பு மிகும், இடம் வலம் ஆகும்
கண்ணி ஆனால் கட்டழகன் வருவான் கைத்தலம் பிடிப்பான்
கோலோச்சும் கிழமை மிகுத்தவர்கேல்லாம் கிருபை மிகும்
சிருவர் சிருமியர்க்கோ சீருடன் விடுமுறையும் கிட்டும்
ஸ்ரீவத்ஸம் புது குடி புகு நன்னாளில் வந்தவர்க்கே

No comments: